முகப்பு
தூத்துக்குடி

தீக்குளித்த மூதாட்டி உயிரிழப்பு

ஆறுமுகனேரியில் தீக்குளித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

ஆறுமுகனேரியில் தீக்குளித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

ஆறுமுகனேரி பெருமாள்புரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாலு. இவரது மனைவி ராமு (80). பாலு இறந்து விட்டாா். இவா்களது

2 மகன்களும் வெளியூரில் வசித்து வருகின்றனா். ராமு தனது பேரன் பால்ராஜுடன் பெருமாள்புரத்தில் தங்கியிருந்தாா். இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மண்ணெண்ணெயை உட­லில் ஊற்றி தீவைத்துக் கொண்டாா். பலத்த காயமடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில்

சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.