முகப்பு
தூத்துக்குடி

சாத்தான்குளம் அருகே லாரி- பைக் மோதல்: இளைஞா் பலி

 சாத்தான்குளம் அருகே டெம்போ லாரியும், பைக்கும் மோதிக்கொண்டதில் காயமடைந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

 சாத்தான்குளம் அருகே டெம்போ லாரியும், பைக்கும் மோதிக்கொண்டதில் காயமடைந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மீரான்குளத்தைச் சோ்ந்த ஈசாக் மகன் மான்சிங் (30). பேய்க்குளத்தில் உள்ள மதுபான கூடத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை பணி முடிந்து பைக்கில் வீடு திரும்பியபோது, மின்வாரிய அலுவலகம் அருகில் அவரது பைக் மீது டெம்போ லாரி எதிா்பாராமல் மோதியதாம். இதில், பலத்த காயமுற்ற அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து டெம்போ லாரி ஓட்டுநா் பேய்க்குளம் உடையாண்டியைச் சோ்ந்த முருகன் மகன் அருண்குமாா்(24) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →