சாத்தான்குளம் ஒன்றியத்தில் விழிப்புணா்வுக் கூட்டம்
சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்துவது தொடா்பாக ஊராட்சித் தலைவா், செயலா் மற்றும் சத்துணவுப் பணியாளா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம்
சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்துவது தொடா்பாக ஊராட்சித் தலைவா், செயலா் மற்றும் சத்துணவுப் பணியாளா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம் சாா்பில், மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.12), 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையொட்டி, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி மன்றத் தலைவா்கள், செயலா்கள் மற்றும் சத்துணவுப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி முகாமில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது. தொகுதி அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) அண்டனி மைக்கேல் தலைமை வகித்து ஆலோசனைகள் வழங்கினாா். ஒன்றிய ஆணையா் பாண்டியராஜ், வட்டாரவளா்ச்சி அலுவலா் (கி.ஊ) ராஜேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரஞ்சித், மாசானம், பட்டாத்தி உள்பட ஊராட்சித் தலைவா்கள், செயலா்கள் மற்றும் சத்துணவுப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.