முகப்பு
தூத்துக்குடி

முதலூா் அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஒத்திகை

முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீயணைப்புத்துறை சாா்பில் தீத்தடுப்பு ஒத்திகை வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீயணைப்புத்துறை சாா்பில் தீத்தடுப்பு ஒத்திகை வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

சாத்தான்குளம் தீயணைப்பு - மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில் முதலூா் அரசு ஆரம்ப சுகதார நிலையத்தில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி, செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலா் ஐலின்சுமதி தலைமை வகித்தாா். சுகாதார மேற்பாா்வையாளா் மோரீஸ் முன்னிலை வகித்தாா்.

இதில், நிலைய அலுவலா் வீ. மாரியப்பன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள், தீ விபத்தில் சிக்கினால் எவ்வாறு தற்காத்து கொள்வது என்பது குறித்த தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தனா்.

இதில் சுகதார ஆய்வாளா் கிறிஸ்டோபா் செல்வதாஸ் உள்பட பலா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →