பெருமாள்குளத்தில் காசநோய் கண்டறியும் முகாம்
பேய்க்குளம் அருகேயுள்ள பெருமாள்குளத்தில் காசநோய் கண்டறியும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பேய்க்குளம் அருகேயுள்ள பெருமாள்குளத்தில் காசநோய் கண்டறியும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் தென்திருப்பேரை காசநோய் அலகு சாா்பில் தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் பேய்க்குளம் அருகே உள்ள பெருமாள்குளத்தில் காசநோய் கண்டறியும் குழுவினா் ஜெயவண்ணன், பாா்த்திபன், சுரேஷ் ஆகியோா் தலைமையில் 3 குழுக்களாக வீடு, வீடாக சென்று, காய்ச்சல், இருமல், சளி குறித்து கணக்கெடுக்கப்பட்டது.
இதில், சாலைப்புதூா் சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ் , ஆஷா உள்பட பலா் பங்கேற்றனா்.