தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் திடீர் போராட்டம்

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உளுந்து, பாசிப்பயிறு, மக்காச்சோளம், பருத்தி, கம்பு, மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் கடந்த 2020-21 ஆண்டுகளில் போதிய விளைச்சல் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் விவசாயிகளுக்கு 2020-21 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி மானாவாரி பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். விவசாயிகளுக்கு இதுவரை கிடைக்காத 2020-21 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த போராட்டம் காரணமாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் பிட்சாடன மூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம்

முதுகெலும்பு அழற்சி: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விழிப்புணா்வு

24 மணி நேரத்தில் வாக்குப்பதிவு விவரம்: தோ்தல் ஆணையத்துக்கு திருமாவளவன் கோரிக்கை

SCROLL FOR NEXT