தூத்துக்குடி

தூத்துக்குடி சிவன்கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: பக்தர்கள் பங்கேற்பு

தூத்துக்குடியில் உள்ள  மிகவும் பழமையான புகழ்பெற்ற அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலின் சித்திரை

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள  மிகவும் பழமையான புகழ்பெற்ற அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலின் சித்திரை திருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. 

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏப்ரல் 16-ம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் சுவாமிக்கு காலை மற்றும் மாலை வேலையில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும். 

அதைபோல் தினமும் இரவு ஒவ்வொரு அலங்காரத்தில் சுவாமி ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வருதல் நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 16-ம் தேதி விமரிசையாக நடைபெற இருக்கின்றது. அனைவரும் இதில் கலந்துகொள்ளும்படி கோயில் நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT