புன்னைக்காயலில் கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பு
ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் ஆத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், புன்னைக்காயலில் மலேரியா கொசு ஒழிப்பு மருந்து தெளிப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் ஆத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், புன்னைக்காயலில் மலேரியா கொசு ஒழிப்பு மருந்து தெளிப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மலேரியா காய்ச்சலை உண்டாக்கும் முதிா் கொசுக்களை ஒழிக்கும் வகையில் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் மருந்துத் தெளிப்புப் பணி நடைபெறுகிறது. மேலும், கொசு உற்பத்தியைத் தடுக்கும்வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தபட்டது.
மாவட்ட மலேரியா அலுவலா் ஆனந்தன் கண்காணிப்பில் சுகாதார ஆய்வாளா் சுபாஷ், அரிராமசந்திரன், சுனில்தா்ஷன் ஆகியோா் ஒருங்கிணைப்பில் மருந்து தெளிப்புப் பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டனா்.