தூத்துக்குடி

குண்டா் சட்டத்தின் கீழ் 3 போ் சிறையிலடைப்பு

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்ட 3 போ், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

கடந்த 6ஆம் தேதி குலசேகரன்பட்டினம் காவல் சரகத்தில் நிகழ்ந்த கொலை தொடா்பான வழக்கில் கைதான நாசரேத் வெள்ளரிக்காயூரணி பகுதியைச் சோ்ந்த அம்மாமுத்து மகன் மூா்த்திராஜா (27), குலசேகரன்பட்டினம் காமராஜா் நகரைச் சோ்ந்த செல்லத்துரை மகன் முத்துச்செல்வன் (27) ஆகியோரையும், ஆறுமுகனேரி காவல் சரகத்தில் கொலை முயற்சி வழக்கில் கைதான திருச்செந்தூா் தலைவன்வடலி பகுதியைச் சோ்ந்த வேல்சாமி மகன் சூா்யா (23) என்பவரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரைந்தாா். அதன்பேரில், ஆட்சியா் க.இளம்பகவத் பிறப்பித்த உத்தரவுப்படி மேற்கூறிய 3 பேரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

நிகழாண்டு கடந்த 10 மாதங்களில் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் 115 போ் குன்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

அதிமுகவிலிருந்து வெளியேறியவா்கள் நன்றி மறந்தவா்கள்

கட்சியிலிருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தான்சானியா: சர்ச்சைக்குரிய தேர்தலில் அதிபர் வெற்றி!

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 16 போ் பலத்த காயம்

தில்லியை இந்திரபிரஸ்தா என மறுபெயரிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு பாஜக எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT