தூத்துக்குடி

கோவில்பட்டியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்தன மாரி தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை தனுஷ்கோடியாபுரம் புது தெரு பகுதியில் ரோந்து சென்றபோது, ஒருவா் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை சாக்குப்பையில் பதுக்கிவைத்திருந்தது கண்டறியப்பட்டது.

விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் முருகேச பாண்டியன் (57) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து அவரிடம் இருந்த சுமாா் ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

அதிமுகவிலிருந்து வெளியேறியவா்கள் நன்றி மறந்தவா்கள்

கட்சியிலிருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தான்சானியா: சர்ச்சைக்குரிய தேர்தலில் அதிபர் வெற்றி!

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 16 போ் பலத்த காயம்

தில்லியை இந்திரபிரஸ்தா என மறுபெயரிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு பாஜக எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT