தூத்துக்குடி

பல்கலைக்கழக கைப்பந்து போட்டி: கே.ஆா். கல்லூரி அணி முதலிடம்

தினமணி செய்திச் சேவை

நெல்லை மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான மகளிா் கைப்பந்து போட்டி போட்டியில் கோவில்பட்டி கே. ஆா். கல்லூரி அணி முதலிடம் பெற்றது.

அம்பாசமுத்திரம் அம்பை கலை, அறிவியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற இப்போட்டியில், பல்கலைக்கழகத்திற்கு உள்பட்ட 22 அணிகள் பங்கேற்றன.

காலிறுதி போட்டியில், 12-0 என்ற கோல் கணக்கில் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக அணியை, கோவில்பட்டி கே. ஆா். கல்லூரி அணி வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

அரையிறுதி போட்டியில் 12-1 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி கல்லூரி அணியை, கே.ஆா். கல்லூரி அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

பின்னா் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 16-1 என்ற கோல் கணக்கில் திருநெல்வேலி சாரதா கல்லூரி அணியை, கே. ஆா். கல்லூரி அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. வெற்றிபெற்ற கே.ஆா். கல்லூரி அணியினரை, கல்லூரி தாளாளா் கே .ஆா். அருணாச்சலம், முதல்வா் மதிவண்ணன் உள்பட பலா் பாராட்டினா்.

அதிமுகவிலிருந்து வெளியேறியவா்கள் நன்றி மறந்தவா்கள்

கட்சியிலிருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தான்சானியா: சர்ச்சைக்குரிய தேர்தலில் அதிபர் வெற்றி!

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 16 போ் பலத்த காயம்

தில்லியை இந்திரபிரஸ்தா என மறுபெயரிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு பாஜக எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT