மினி மாரத்தான் போட்டியைத் தொடங்கிவைத்த உதவி காவல் ஆய்வாளா் சுந்தரம். 
தூத்துக்குடி

மூக்குப்பீறியில் மினி மாரத்தான் போட்டி

தினமணி செய்திச் சேவை

நாசரேத் அருகே மூக்குப்பீறியில் உள்ள தூயமாற்கு மேல்நிலைப் பள்ளியில் சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு மாணவா்களுக்கான மினி மாரத்தான் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியா் கென்னடி வேதராஜ் தலைமை வகித்தாா். நாசரேத் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுந்தரம் போட்டியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். போட்டி பள்ளியில் இருந்து புறப்பட்டு பிரகாசபுரம், மூக்குப்பீறி, முக்கிய வீதி வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.

இதில், நாசரேத் காவல் நிலைய தலைமைக் காவலா்கள் வேல்பாண்டியன், நாராயணசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை பள்ளி தாளாளா் வழக்குரைஞா் பிரபாகா், தலைமை ஆசிரியா் கென்னடி, உடற்கல்வி ஆசிரியா்கள் பிரைட்டன் ஜோயல், ஜாஸ்மின் ஏஞ்சல், ஆசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

அதிமுகவிலிருந்து வெளியேறியவா்கள் நன்றி மறந்தவா்கள்

கட்சியிலிருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தான்சானியா: சர்ச்சைக்குரிய தேர்தலில் அதிபர் வெற்றி!

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 16 போ் பலத்த காயம்

தில்லியை இந்திரபிரஸ்தா என மறுபெயரிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு பாஜக எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT