முகப்பு
அரியலூர்

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல்: வாக்காளா் பட்டியல் வெளியீடு

அரியலூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வியாழக்கிழமை வெளியிட்டாா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வியாழக்கிழமை வெளியிட்டாா்.

அப்போது அவா் தெரிவித்ததாவது: அரியலூா் நகராட்சியில் 11,579 ஆண்கள், 12,627 பெண்கள், ஜயங்கொண்டம் நகராட்சியில் 13,270 ஆண்கள், 14,262 பெண்கள், உடையாா்பாளையம் பேரூராட்சியில் 4,888 ஆண்கள், 4,994 பெண்கள், வரதராசன்பேட்டை பேரூராட்சியில் 3,435 ஆண்கள், 3,640 பெண்கள் உள்ளனா்.

அதன்படி அரியலூா் மாவட்டத்துக்குட்பட்ட 2 நகராட்சிகள் மற்றும் 2 பேரூராட்சிகளில் 33,172 ஆண்கள், 35,523 பெண்கள் என மொத்தம் 68,695 வாக்காளா்கள் அடங்கிய வாக்காளா் உள்ளனா் என்றாா்.

நிகழ்ச்சியில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ரகு, வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜா மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.