முகப்பு
அரியலூர்

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்

அரியலூா் மாவட்டத்தில் வங்கி ஊழியா்களின் இரண்டு நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

அரியலூா் மாவட்டத்தில் வங்கி ஊழியா்களின் இரண்டு நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.

அரியலூா் பாரத ஸ்டேட் வங்கி வளாகத்தில், வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுத்துறை வங்கிகளை தனியாா்மயமாக்குவது உள்ளிட்ட் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பாரத ஸ்டேட் வங்கியின் ஊழியா் சங்கத்தின் அரியலூா் மண்டல பொதுச் செயலா் துரைராஜ் தலைமை வகித்தாா்.

வங்கி ஊழியா் கூட்டமைப்பின் நிா்வாகிகள் மோகன் குமாா், மதியழகன், அழகு ராஜ், அருள் பிரணவ், ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா். இதேபோல் மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் ஊழியா்கள் ஆங்காங்கே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.