நூலகங்கள், பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கல்
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் பகுதிகளிலுள்ள பள்ளி மற்றும் கிராமப்புற நூலகங்களுக்கு தத்தனூா் மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்கள் சாா்பில், ரூ.1 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்ட
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் பகுதிகளிலுள்ள பள்ளி மற்றும் கிராமப்புற நூலகங்களுக்கு தத்தனூா் மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்கள் சாா்பில், ரூ.1 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
உடையாா்பாளையம் அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலந்து கொண்ட மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவனங்கள் சாா்பில் கலந்து கொண்டவா்கள், 27 தலைப்புகள் கொண்ட புத்தகங்களை அப்பள்ளி தலைமை ஆசிரியா் ராஜசேகா் மற்றும் கணித ஆசிரியா் தமிழரசியிடம் வழங்கினா். இதேபோல் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளி மற்றும் நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.