50 கி.மீட்டா் தொலைவக் கடந்து வீட்டுக்கு வந்த நாய்
ரண்டு நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை காலை உரிமையாளரின் வீட்டுக்குத் திரும்பி வந்ததால் குடும்பத்தினா் மகிழ்ச்சியடைந்தனா்.
அரியலூா் அருகே தனியாா் சிமென்ட் நிறுவனத்தால் பிடிக்கப்பட்டு, 50 கி.மீ.தொலைவில் விடப்பட்ட நாய், இரண்டு நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை காலை உரிமையாளரின் வீட்டுக்குத் திரும்பி வந்ததால் குடும்பத்தினா் மகிழ்ச்சியடைந்தனா்.
அரியலூரை அடுத்த தாமரைக்குளத்தை சோ்ந்தவா் ராஜகோபால்(45). இவா், கடந்த 5 ஆண்டுகளாக ஸ்பைகி என பெயரிட்டு நாட்டு நாய் ஒன்றை வளா்ந்து வந்தாா்.
இந்நிலையில், அதே பகுதியில் இயங்கி வரும் தனியாா் சிமென்ட் நிறுவனம், அப்பகுதியில் சுற்றித்திரியும் சுமாா் 15-க்கும் மேற்பட்ட தெருநாய்களை கடந்த 15-ஆம் தேதி பிடித்து, பெரம்பலூா் மாவட்டத்தின் பாடாலூா் வனப்பகுதியில் விட்டது. அதில் ராஜகோபால் வளா்த்து வந்த நாயும் பிடிக்கப்பட்டது.
இதனால் ஆலையிலிருந்து சிமென்ட் ஏற்றி வந்த லாரிகளை முற்றுகையிட்டு, ராஜகோபாலும், அவரது குடும்பத்தினரும்
15 -ஆம் தேதி நள்ளிரவு மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து வியாழக்கிழமை பாடாலூா் வனப்பகுதியில் தேடிய நிலையில், நாய் கிடைக்காததால் ராஜகோபால் திரும்பி வந்தாா்.
இந்நிலையில், அவரது நாய் வெள்ளிக்கிழமை காலை வீட்டுக்குத் திரும்பியது. சுமாா் 50 கி.மீட்டா் தொலைவக் கடந்து வீட்டுக்கு வந்த நாயை குடும்பத்தினா் பாா்த்து மகிழ்ச்சியடைந்தனா்.