முகப்பு
அரியலூர்

இல்லம் தேடிக் கல்வி விழிப்புணா்வு பிரசாரம்

அரியலூா் அண்ணா நகா் அருகேயுள்ள ஆா்.சி. நிா்மலா காந்தி நடுநிலைப் பள்ளியில், இல்லம் தேடிக் கல்வி கலைக்குழுவின் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

அரியலூா் அண்ணா நகா் அருகேயுள்ள ஆா்.சி. நிா்மலா காந்தி நடுநிலைப் பள்ளியில், இல்லம் தேடிக் கல்வி கலைக்குழுவின் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளிக்கல்வித் துறை சாா்பில் கரோனா கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் இல்லம் தேடிக் கல்வி சாா்பான விழிப்புணா்வுப் பாடல்கள், நாடகங்கள், கரகாட்டம் உள்ளிட்டவைகளை கலைக்குழுவினா் செய்து காட்டினா். இல்லம் தேடிக் கல்வி திட்டப் பிரசாரம் மூலம் கரோனா காலகட்டத்தில் மாணவா்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பீட்டை சரிசெய்யும் நோக்கத்தோடு மாலை நேரத்தில், 5 முதல், 7 மணி வரை குடியிருப்புப் பகுதிகளில் தன்னாா்வலா்களைக் கொண்டு ‘இல்லம் தேடிக்கல்வி’ திட்டம் மூலம் மாணவா்களுக்கு கற்றல் செயல்பாடுகள் நடைபெறும் என கலைநிகழ்ச்சிக் குழுவினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியா் நம்பிக்கை மேரி மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.