முகப்பு
அரியலூர்

ஜயங்கொண்டம் பகுதிகளில் கஞ்சா விற்ற 5 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் கஞ்சா விற்ாக 5 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் கஞ்சா விற்ாக 5 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

ஜயங்கொண்டம் காவல் உதவி ஆய்வாளா் வசந்த் தலைமையிலான தனிப்படையினா் நகரில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஜயங்கொண்டம் சீனிவாசன் நகா் க.கணேசன் (29), அண்ணாநகா் பா.சச்சின் (22), ர. நிஜந்தன்(19), காமராஜா் நகா் கா. விக்னேஷ் (20), கும்பகோணம் இந்திராகாந்தி சாலை பா.ராஜா (23) ஆகியோரைக் காவல்துறையினா் கைது செய்து, ஒரு கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

மதுபானங்கள் பதுக்கியவா் கைது: ஸ்ரீபுரந்தான் காலனித் தெருவில் மதுபானங்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்த தளபதியை (25), காவல் உதவி ஆய்வாளா் லோகநாதன் தலைமையிலான காவல்துறையினா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

சுமை ஆட்டோ பறிமுதல்: விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ் தலைமையிலான காவல்துறையினா் மழவராயநல்லூரில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது விக்கிரமங்கலம் நோக்கி வந்த சுமை ஆட்டோ ஓட்டுநா், காவல்துறையினரைக் கண்டதும் ஆட்டோவை நிறுத்தி விட்டு, தப்பியோடிவிட்டாா்.

தொடா்ந்து காவல்துறையினா் சுமை ஆட்டோவில் சோதனை நடத்திய போது, மருதையாற்றுப் படுகையிலிருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சுமை ஆட்டோவை பறிமுதல் செய்த காவல்துறையினா், ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.