FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

வளைகுடா போரில் இணையும் யேமனின் ஹவுதிகள்! இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்!

இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சிப்படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது குறித்து...

Updated On : 28 மார்ச் 2026, 1:24 pm IST
இஸ்ரேல் மீது ஹவுதிகள் ஏவுகணைத் தாக்குதல் - AP
பகிர்:

இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதல்களுக்கு யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையினர் பொறுப்பேற்றுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கடந்த பிப். 28 அன்று கொல்லப்பட்டார். இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், இந்தப் போரில் ஈரானுக்கு ஆதரவாக யேமனின் ஹவுதி கிளர்ச்சிப் படையினர் இஸ்ரேல் மீது சனிக்கிழமை (மார்ச் 28) அதிகாலை ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஏற்கெனவே, ஈரானுக்கு ஆதரவாக இந்தப் போரில் ஹவுதிகள் இணையக் கூடும் என அவர்களின் ராணுவ செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் யஹ்யா சாரி நேற்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, சனிக்கிழமை அதிகாலை யேமனில் இருந்து வீசப்பட்ட ஏவுகணைகளை இடைமறித்து தகர்த்துள்ளதாக, இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. இருப்பினும், தலைநகர் டெல் அவிவில் பாதிப்புகள் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், தெற்கு லெபனானின் மீது தாக்குதல் நடத்தி ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளை இஸ்ரேல் ராணுவம் தொடங்கியுள்ளது.

இத்துடன், ஈரானின் ஆதரவைப் பெற்ற யேமனின் ஹவுதிகள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

summary

Yemen's Houthi rebels have claimed responsibility for the missile attacks on Israel.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments