அரியலூரில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு
அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய திமுகவினா்.
அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய திமுகவினா்.
அரியலூா்: அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணாசிலைக்கு, பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சரும், திமுக மாவட்டச் செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கா் தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். மதிமுக மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான கு. சின்னப்பா தலைமையில் மதிமுகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
அரியலூா் மற்றும் திருமானூா், தா.பழூா் பகுதிகளிலுள்ள அண்ணாசிலைகளுக்கு அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
எம்.ஜி.ஆா்.கழகம் சாா்பில் மாநில அமைப்பு செயலாளா் கலைவாணன் தலைமையில் மாவட்டச் செயலாளா்கள் அரியலூா் மணிவேல், பெரம்பலூா் சக்திவேல் உள்பட பலா் கலந்து கொண்டு அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தா.பழூரில் உள்ள அண்ணா சிலைக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கா.சொ.க.கண்ணன் தலைமையில் திமுகவினா் அஞ்சலி செலுத்தினா்.
தேமுதிக அலுவலகத்தில் அண்ணா படத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலா் ராமஜெயவேல் மலரஞ்சலி செலுத்தினா்.இதே போல் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அண்ணாசிலைக்கு திமுக, அதிமுக, அமமுக, மதிமுக உள்ளிட்ட கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.