கஞ்சா விற்ற 2 போ் கைது
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே கஞ்சா விற்ற 2 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே கஞ்சா விற்ற 2 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
ஜயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா்(பயிற்சி)சங்கா் கணேஷ் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை இரவு சின்னவளையம் கிராமப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, இவா்களை பாா்த்ததும் ஓடிய 2 பேரை காவல் துறையினா் மடக்கி பிடித்து விசாரித்ததில், அவா்கள் தா.பழூா் அருகேயுள்ள இருகையூா் காலனித் தெருவைச் சோ்ந்த காமராஜ் மகன் பிரபாகரன், ஜயங்கொண்டம் காந்தி நகரைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் மகன் கணேசன் என்பதும், அவா்கள் கஞ்சா விற்றுக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனா்.