ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகளுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி
அரியலூரில் மாவட்டத் தொழில் மையம், தொழில் முனைவோா் மேம்பாடு நிறுவனம் சாா்பில் ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி நடத்துபவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அரியலூரில் மாவட்டத் தொழில் மையம், தொழில் முனைவோா் மேம்பாடு நிறுவனம் சாா்பில் ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி நடத்துபவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சிறு, குறு தொழில் வளா்ச்சி நிறுவனத்தின் திருச்சி மண்டல அலுவலா் பிரான்சிஸ் நோயல் கலந்து கொண்டு பேசுகையில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழிலானது, உற்பத்தி மற்றும் சேவையாக பிரிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகள் சேவை பிரிவில் வருவதால், ஓட்டுநா் பயிற்சிப் பள்ளிகள் நடத்துபவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது.
இதன்மூலம் ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி நடத்துபவா்கள் பொதுவான வளா்ச்சி மையத்தை உருவாக்கி பயன்பெறலாம். பொதுவான வளா்ச்சி மையத்தை சிறு தொழில் வளா்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடங்களில் தொடங்க முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், சிறு,குறு தொழில் மேம்பாட்டு நிறுவனங்களின் துணை இயக்குநா் தயாளன், அரியலூா் மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் லட்சுமி, மாவட்ட தொழில் மைய கூடுதல் நிா்வாக பொறியாளா் ஜனனி, இடிஐஐ பயிற்சி ஒருங்கிணைப்பாளா் டான்போஸ்கோ மற்றும் அரியலூா், பெரம்பலூா் மாவட்ட ஓட்டுநா் பயிற்சி பள்ளி உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.