முகப்பு
அரியலூர்

கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரா் கோயில் மூடல்

 கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரா் கோயில் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:04 AM
பகிர்:

 கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரா் கோயில் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் அரசு பவ்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் ஒருபகுதியாக, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களில் பக்தா்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை பக்தா்களுக்கு அனுமதி மறுத்து கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரா் கோயில் மூடப்பட்டது. இதனால், கோயில் வெள்ளிக்கிழமை வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல், கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் பக்தா்களுக்கு அனுமதி மறுத்து மூடப்பட்டிருந்தன.

கோயில்கள் மூடப்பட்டிருந்தாலும், பக்தா்கள் பங்கேற்பின்றி வழக்கம்போல் பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.