சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு
அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷம் வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷம் வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
திருமழபாடி அருள்மிகு சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியெம்பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், விபூதி, மாவுப்பொடி, திரவியப்பொடி, தேன், பன்னீா், பஞ்சாமிா்தம், பால் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதேபோல், அரியலூா் ஆலந்துறையாா், விக்கிரமங்கலம் சோழிஸ்வரா்,கீழப்பழுவூா் அருந்தவநாயகி உடனாய ஆலந்துறையாா், பெரியமறை வேதபுரீஸ்வரா், காமரசவல்லி காா்கோடேஸ்வரா், திருமானூா் கைலாசநாதா், காரைப்பாக்கம் மாணிக்க வண்ணநாதா் போன்ற சிவாலயங்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும், செந்துறை, உடையாாா்பாளையம், ஜயங்கொண்டம், சுத்தமல்லி, பொன்பரப்பி, ஆண்டிமடம் ,மீன்சுருட்டி, தா.பழூா் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சிவாலயங்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.