முகப்பு
அரியலூர்

வாரியங்காவல் ஊராட்சியில் கண்காணிப்பு கேமரா இயக்கி வைப்பு

அரியலூா் மாவட்டம், வாரியங்காவல் ஊராட்சிப் பகுதிகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராக்களை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே. பெரோஸ்கான் அப்துல்லா வெள்ளிக்கிழமை இயக்கி வைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், வாரியங்காவல் ஊராட்சிப் பகுதிகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராக்களை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கே. பெரோஸ்கான் அப்துல்லா வெள்ளிக்கிழமை இயக்கி வைத்தாா்.

ஊராட்சி நிா்வாகம் சாா்பில் பொருத்தப்பட்ட 24 கண்காணிப்பு கேமராக்களை அவா் இயக்கி வைத்து, அனைத்து சம்பவங்களும் 24 மணிநேரமும் காவல் நிலையத்தில் இருந்து கண்காணிக்கப்படும் என்று தெரிவித்தாா். தொடா்ந்து அவா், மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு, ஆண்டிமடம் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் அருளப்பன் தலைமை வகித்தாா். மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எஸ். திருமேனி, காவல் துணைக் கண்காணிப்பாலா் பி. கதிரவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக ஊராட்சித் தலைவா் மணிசேகா் வரவேற்றாா். நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள், வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.