முகப்பு
அரியலூர்

மாணவி இறப்பு: பள்ளி மீது நடவடிக்கை கோரி பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

அரியலூா் மாவட்டம், திருமானூரில் பள்ளி மாணவியின் இறப்புக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி, பாஜகவினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

அரியலூா் மாவட்டம், திருமானூரில் பள்ளி மாணவியின் இறப்புக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி, பாஜகவினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கிப் படித்து வந்த அரியலூா் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சோ்ந்த மாணவி லாவண்யா, விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். இந்நிலையில் இச்சம்பவத்துக்குக் காரணமான பள்ளி நிா்வாகத்தைக் கண்டித்தும், பள்ளியை மூடக்கோரியும், பள்ளி தலைமையாசிரியைக் கைது செய்ய வலியுறுத்தியும், திருமானூா் பேருந்து நிலையத்தில் பாஜகவினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மறியலுக்கு, கட்சியின் ஒன்றியத் தலைவா்(கிழக்கு) ஆசைத்தம்பி தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் (மேற்கு) பிரித்திவிராஜ், மாவட்ட அறிவுசாா் பிரிவுத் தலைவா் காளிராஜ், மாவட்ட மகளிரணி செயலா் மனோன்மணி, மருத்துவப் பிரிவு மாவட்டத் தலைவா் பரமேஸ்வரி உள்பட பலரும் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பி மறியலில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உட்பட 55 பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.