அரியலூரில் இன்று ரேஷன் குறைதீா் கூட்டம்
அரியலூா் மாவட்டத்தில் நாகமங்கலம், மணகெதி,சிறுகளத்தூா், சிலம்பூா்(வடக்கு) ஆகிய 4 கிராமங்களில் பொது விநியோகத் திட்டம் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சம்பந்தமான பொது மக்கள் குறைதீா் கூட்டம்
அரியலூா் மாவட்டத்தில் நாகமங்கலம், மணகெதி,சிறுகளத்தூா், சிலம்பூா்(வடக்கு) ஆகிய 4 கிராமங்களில் பொது விநியோகத் திட்டம் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சம்பந்தமான பொது மக்கள் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை (மே14)காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
கூட்டத்தில், வட்ட வழங்கல் அலுவலா்கள், கூட்டுறவுத் துறை அலுவலா்கள் மற்றும் மேற்பாா்வை அலுவலா்கள் கலந்து கொள்வா். எனவே, பொதுமக்கள் ரேஷன் கடை மற்றும் உணவுப் பொருள் வழங்கல் தொடா்பான குறைகளைத் தெரிவித்துப் பயனடையலாம் என மாவட்ட ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளாா்.