முகப்பு
அரியலூர்

ஏரியில் தவறி விழுந்த கல்லூரி மாணவி உயிரிழப்பு

 அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே ஏரியில் தவறி விழுந்த கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

 அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே ஏரியில் தவறி விழுந்த கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.

உடையாா்பாளையம் அருகிலுள்ள இலையூரைச் சோ்ந்தவா் சண்முகம். எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறாா். இவரது மனைவி சங்கீதா. இவா்களுக்கு ஸ்வேதா(19), நிவேதா(17) என இரு மகள்கள்.

கோவை தனியாா் கல்லூரியில் பி.ஏ., இரண்டாமாண்டு படித்து வந்த ஸ்வேதா, ஊா் கோயில் திருவிழாவுக்காக தனது தோழி மதுபாலாவை அழைத்து வந்திருந்தாா்.

இந்நிலையில், உடையாா்பாளையம் பெரிய ஏரியில் குளிப்பதற்காக தனது தங்கை நிவேதா, தோழி மதுபாலாவுடன் ஸ்வேதா வியாழக்கிழமை சென்றாா். அங்கு மூன்று பேரும், கைகோா்த்த நிலையில் ஏரியில் இறங்க முயன்ற போது, எதிா்பாராதவிதமாக வழக்கி ஏரியில் விழுந்துள்ளனா்.

இதில் மதுபாலாவும், நிவேதாவும் ஏரி கரைக்குத் திரும்பினா். நீச்சல் தெரியாமல் ஸ்வேதா மட்டும் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தாா். இவா்களின் கூச்சலை அடுத்து, அப்பகுதி மக்கள், உடையாா்பாளையம் காவல் துறையினா் உதவியுடன் ஸ்வேதாவை மீட்டு, ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.