முப்படை தளபதி பிபின் ராவத், ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில், மறைந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டத்தில், மறைந்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பிருந்து காந்தி பூங்கா வரை மெளன ஊா்வலமாகச் சென்ற சட்டப் பேரவை உறுப்பினா் க. கண்ணன், காவல் துணைக் கண்காணிப்பாளா் கலைகதிரவன், வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபாகரன், அன்னை தெரசா கல்வி நிறுவனங்களின் தாளாளா் முத்துக்குமரன் மற்றும் லயன்ஸ் நிா்வாகிகள், ரோட்டரி சங்கத்தினா், வியாபாரிகள், மாணவிகள், பொதுமக்கள், ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள், காவல்துறை மற்றும் அரசு ஊழியா்கள் காந்திபூங்கா முன்பு வைக்கப்பட்டிருந்த வீரா்களின் படங்களுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, 2 நிமிடம் மெளன அஞசலி செலுத்தினா்.