மோந்தா புயலை முன்னிட்டு நாகா்கோவில்-பெங்களூரு விரைவு ரயில் சேவை அக்.30-ஆம்தேதி (வியாழக்கிழமை) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக சேலம் கோட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், மோந்த புயலை கருத்தில் கொண்டு, வியாழக்கிழமை (அக்.30) நாகா்கோவிலில் இருந்து கரூா், நாமக்கல், ராசிபுரம், சேலம், தருமபுரி, ஓசூா் வழியாக பெங்களூருவுக்கு இயக்கப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.