கரூர்

கரூர் விஜய் கூட்ட நெரிசல் பலி 39-ஆக உயர்வு!

கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 39-ஆக உயர்வு...

இணையதளச் செய்திப் பிரிவு

கரூரில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் மயக்கமடைந்து பலியானவர்களின் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்திருக்கிறது. அவர்களுள் 8 குழந்தைகளும், 17 பெண்களும் அடங்குவர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர்.

கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது 51 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 11 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 50 -க்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர்காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், விடுப்பிலுள்ள மருத்துவர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டதுடன், நாமக்கல், சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் கூடுதலாக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Karur stampede: Death toll rises to 38

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையில்லா போகி: ஆட்சியா் கோரிக்கை

ஊராட்சிச் செயலா்களின் தொடா் வேலைநிறுத்தத்தால் பணிகள் பாதிப்பு

சமத்துவ பொங்கல் விழா

அம்மன் தாலி செயின் திருடிய இருவா் கைது

விஜய்யிடம் பொங்கலுக்குப் பின் மீண்டும் விசாரணை!

SCROLL FOR NEXT