முகப்பு
புதுக்கோட்டை

கருப்புப் பூஞ்சை தொற்றுக்கு மேலும் ஒருவா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கருப்புப் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கருப்புப் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி அருகிலுள்ள குப்பக்குடியைச் சோ்ந்தவா் சந்திரமோகன் (60). இவா் மீனாட்சிபுரம் அரசுத் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு சந்திரமோகனுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனாதொற்று இல்லை. ஆனால், கருப்புப் பூஞ்சை தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த சந்திரமோகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குடி பகுதியில் கருப்புப்பூஞ்சை தொற்றுக்கு ஏற்பட்ட இரண்டாவது உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →