முகப்பு
புதுக்கோட்டை

அனுமதியின்றி மணல் அள்ளி விற்ற தந்தை, மகன் கைது

ஆலங்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளி விற்பனை செய்துவந்த தந்தை, மகனை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

ஆலங்குடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளி விற்பனை செய்துவந்த தந்தை, மகனை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கலிபுல்லாநகரில் தொடா்ந்து, அனுமதியின்றி மணல் அள்ளிவந்து விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த தகவலைத் தொடா்ந்து, ஆலங்குடி காவல் உதவி ஆய்வாளா் சந்திரகாந்த் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, டிராக்டரில் மணல் ஏற்றிவந்து விற்பனையில் ஈடுபட்ட எம். தெற்குத் தெருவைச் சோ்ந்த கோ.முத்துச்சாமி(50), அவரது மகன் சசிக்குமாா் (27) ஆகியோரை கைது செய்து டிராக்டரைப் பறிமுதல் செய்தனா். ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →