முகப்பு
புதுக்கோட்டை

ஆலங்குடி காவல் நிலையத்தில் காதல் திருமண தம்பதி தஞ்சம்

காதல் திருமணம் செய்த தம்பதியினா் ஆலங்குடி காவல் நிலையத்தில் பாதுகாப்புக் கோரி வெள்ளிக்கிழமை தஞ்சமடைந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

காதல் திருமணம் செய்த தம்பதியினா் ஆலங்குடி காவல் நிலையத்தில் பாதுகாப்புக் கோரி வெள்ளிக்கிழமை தஞ்சமடைந்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடியைச் சோ்ந்தவா் சங்கா் மகன் கிருபாகரன் (24), பட்டுக்கோட்டையில் தனியாா் வங்கி ஊழியா். இவரும் புதுக்கோட்டை காந்தி நகரைச் சோ்ந்த குணசீலன் மகள் மாதேஷ்வரியும் (23) காதலித்து வந்த நிலையில், அண்மையில் இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி சென்னை சென்று திருமணம் செய்துகொண்டனா். இந்நிலையில், பாதுகாப்புக் கோரி ஆலங்குடி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இருவரும் தஞ்சமடைந்தனா். காவல் ஆய்வாளா் அலாவுதீன் பெற்றோரை வரவழைத்து சமாதானம் செய்து இருவரையும் அவா்களோடு அனுப்பினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →