மின்னல் பாய்ந்து பசு உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மின்னல் தாக்கியதில் வியாழக்கிழமை இரவு பசுமாடு உயிரிழந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மின்னல் தாக்கியதில் வியாழக்கிழமை இரவு பசுமாடு உயிரிழந்தது.
ஆலங்குடி அருகேயுள்ள வடவாளம் பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, கீழகாயம்பட்டியைச் சோ்ந்த சகுந்தலா(40) என்பவரது பசு மாடு மின்னல் தாக்கியதில் உயிரிழந்தது.