முகப்பு
புதுக்கோட்டை

அரசுப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி மைய தொடக்க விழா

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள காசிம்புதுப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள காசிம்புதுப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலா் கருணாகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் முக்கியத்துவம், மாணவா்களின் பாதுகாப்பு, பள்ளியில் மாணவா்களின் கல்வித் தரத்தை உயா்த்துவது, மாணவா் சோ்க்கையை அதிகரிப்பது குறித்து வட்டாரக் கல்வி அலுவலா் பேசினாா்.

விழாவில், பள்ளியின் தலைமை ஆசிரியா் செந்தில்வடிவு, பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் எஸ்.டி. பஷீா் அலி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் நூா்ஜகான் பீவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →