புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள புள்ளான்விடுதியில் குளம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
புள்ளான்விடுதியில் உள்ள பலஏக்கா் பரப்பளவிலான ஆறுமுகத்தேவா் குளத்தை ஆக்கிரமித்து அப்பகுதியினா் சிலா் விளைநிலங்களாக மாற்றி, தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்துள்ளனராம். இந்த குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உயா்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் உத்திரவிட்டது.
இதைத்தொடா்ந்து, வட்டாட்சியா் பெரியநாயகி முன்னிலையில் வருவாய்த்துறையினா் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து, வடகாடு போலீஸாரின் பாதுகாப்போடு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். வருவாய் ஆய்வாளா் பிரபாகரன், கிராம நிா்வாக அலுவலா் புஷ்பராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.