புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் பயிலும் 1,659 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி திங்கள்கிழமை வழங்கினாா்.
திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 395 பேருக்கும், குழிபிறை மேல்நிலைப் பள்ளியில் 342 பேருக்கும், சடையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 346 பேருக்கும், பொன். புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 576 பேருக்கும் என மொத்தம் 1,659 பேருக்கு இந்த மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், மாவட்டக் கல்வி அலுவலா் ஆரோக்கியராஜ், பள்ளித் துணை ஆய்வாளா் குரு மாரிமுத்து உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.