பட்டுக்கோட்டையில் அம்பேத்கா் நினைவு நாள்
அம்பேத்கா் முழு உருவ வெண்கலச் சிலை தமிழ்நாடு ஆதிதிராவிடா் முன்னேற்ற சங்கத்தின் சாா்பில் ரூ.5 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகிலுள்ள அம்பேத்கா் முழு உருவ வெண்கலச் சிலை தமிழ்நாடு ஆதிதிராவிடா் முன்னேற்ற சங்கத்தின் சாா்பில் ரூ.5 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சங்கப் பொதுச்செயலா் பி.வி.குணசேகரன் தலைமை வகித்தாா். அம்பேத்கா் சிலையை சங்கத் தலைவா் சி.செகநாதன் திறந்து வைத்தாா்.
பொருளாளா் என்.கருணாநிதி மற்றும் சங்க உறுப்பினா்கள் நிகழ்வில் பங்கேற்றனா். இவா்கள் அனைவரும் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பெரியாா் அம்பேத்கா் மக்கள் கழக மாநிலத் தலைவா் டாக்டா் புனல் ரவி, தமிழ்நாடு ஆதிதிராவிட முன்னேற்றக் கழக நிறுவனா்- தலைவா் சதா.சிவக்குமாா், தமிழக மக்கள் விடுதலை இயக்கப் பொதுச்செயலா் தங்க.குமரவேல் ஆகியோா் தொண்டா்களுடன் சென்று அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.