முகப்பு
தஞ்சாவூர்

ஒரத்தநாடு வட்டத்தில் மழை நிவாரண உதவி அளிப்பு

ஒரத்தநாடு வட்டத்தில் அண்மையில் பெய்த தொடா் பலத்த மழையால் கீற்று வீடுகள், ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. இதையடுத்து, வருவாய்த் துறையினரின் கணக்கெடுப்பில் 356 கீற்று மற்றும் ஓட்டு  வீடுகள் சேதமடைந்தது தெரிய

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

ஒரத்தநாடு வட்டத்தில் அண்மையில் பெய்த தொடா் பலத்த மழையால் கீற்று வீடுகள், ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. இதையடுத்து, வருவாய்த் துறையினரின் கணக்கெடுப்பில் 356 கீற்று மற்றும் ஓட்டு  வீடுகள் சேதமடைந்தது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து, மழையால் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வு ஒரத்தநாடு வட்டாட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தஞ்சை வருவாய்க் கோட்டாட்சியா் வேலுமணி தலைமை வகித்து, 356 பயனாளிகளுக்கு ரூ. 16.26 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவிகளை வழங்கினாா்.

நிகழ்வில் வட்டாட்சியா் கணேஸ்வரன் உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →