முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூர், திருவையாற்றில் இடியுடன் கூடிய மழை

தஞ்சாவூர், திருவையாற்றில் ஒரு வாரத்துக்கு பிறகு வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

Updated On : 5 ஜூன், 2020 at 8:38 PM
பகிர்:

தஞ்சாவூர், திருவையாற்றில் ஒரு வாரத்துக்கு பிறகு வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு வாரத்துக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. அதன் பிறகு வெயில் கடுமையாக இருப்பதால், இரவில் புழுக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதேபோல, வெள்ளிக்கிழமை பகலிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

இந்நிலையில், திருவையாற்றில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் பரவலாக மழை பெய்தது. சுமார் அரை மணிநேரத்துக்கு இடியுடன் கூடிய சற்று பலத்த மழை பெய்தது. இதனால், மின் தடை ஏற்பட்டது. இதேபோல, தஞ்சாவூரிலும் பலத்த இடி சப்தத்துடன் இரவு 7 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது.

Advertisement

சுமார் அரை மணிநேரம் பெய்ததால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த நிலை ஏற்பட்டது. மேலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆங்காங்கே மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.