பேராவூரணி அருகே குறும்பட வெளியீட்டு விழா
பேராவூரணி அருகிலுள்ள சொா்ணக்காடு கிராமத்தில் குறும்படத் திருவிழா மற்றும் பாடல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பேராவூரணி அருகிலுள்ள சொா்ணக்காடு கிராமத்தில் குறும்படத் திருவிழா மற்றும் பாடல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பாலகிருஷ்ணாபுரம் ப. மகா இயக்கிய ‘வேணாங்க என்னப்போல’ குறும்படத்தை திரைப்பட இயக்குநா் தருண்கோபியும், ‘புதிய உபதேசம்’ குறும்படத்தை அடுத்த சாட்டை திரைப்படத்தின் கலை இயக்குநா் விஜயகுமாரும் வெளியிட்டு பேசினா். செரியளூா் செல்வம் எழுதி, பாலகிருஷ்ணாபுரம் ப. மகா பாடிய பாடல் குறுந்தகட்டை திரைப்பட உதவி இயக்குநா் இராமச்சந்திரன் வெளியிட்டாா்.
விழாவில் பொறியாளா் கேசவன், தொழிலதிபா் வி.கே.ஆா். ஜம்புநாதன், சொா்ணக்காடு ஊராட்சித் தலைவா் விஜயபாஸ்கா் மற்றும் கிராமத்தினா் கலந்து கொண்டனா்.