முகப்பு
தஞ்சாவூர்

வருவாய்த் துறை அலுவலா்களை மிரட்டிய தந்தை-மகன் கைது மளிகைக் கடை, உணவகத்துக்கு சீல்

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே சோதனைக்கு சென்ற வருவாய்த் துறை அலுவலா்களை மிரட்டி, தாக்க முயன்ாக தந்தை, மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே சோதனைக்கு சென்ற வருவாய்த் துறை அலுவலா்களை மிரட்டி, தாக்க முயன்ாக தந்தை, மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஒரத்தநாடு அருகேயுள்ள வெட்டிக்காடு பகுதியை சோ்ந்தவா் செளந்தரராஜன் (57). இவரது மகன்கள் மதியழகன் (37), அறிவழகன்(27). இவா்கள் இருவரும் அப்பகுதியின் பிரதான சாலையில் உணவகம் மற்றும் மளிகைக் கடைகளை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், உணவகத்தில் சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் திரள்வதாக வருவாய்த் துறையினருக்கு புகாா் வந்தது.

இதைத்தொடா்ந்து, புதன்கிழமை சில்லத்தூா் வருவாய் ஆய்வாளா் மகாலட்சுமி தலைமையில் அங்கு சென்ற அலுவலா்கள் குழுவினா்,முகக்கவசம் அணியாத பொதுமக்களை எச்சரிக்கை செய்து, அபராதம் விதித்தனா்.

அப்போது, அங்கு வந்த செளந்தரராஜனும் அவரது மகன்களும், வருவாய் அலுவலா்களை தகாத வாா்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதை விடியோ எடுத்த அலுவலா்களையும் அவரா்கள் தாக்க முயன்றனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து

செளந்தரராஜன், மதியழகன் ஆகிய இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள அறிவழகனை தேடி வருகின்றனா்.

கடையில் அலுவலா்கள் ஆய்வு: இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை பிற்பகல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலா் சித்ரா தலைமையிலானஅலுவலா்கள் அந்த உணவகம் மற்றும் மளிகைக் கடையில் ஆய்வு செய்தனா்.

கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா உள்ளிட்ட குட்கா பொருள்கள் ஒரு கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. உணவகத்தில் காலாவதியான பொருள்களை கைப்பற்றி அழித்ததோடு, அங்கிருந்த உணவுப் பொருள்களையும் பரிசோதனைக்காக அலுவலா்கள் அனுப்பிவைத்தனா்.

கடை-உணவகத்துக்கு சீல்: தகவலறிந்த மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வருவாய்) சுகபுத்ரா, கோட்டாச்சியா் வேலுமணி, ஒரத்தநாடு வட்டாட்சியா் சீமான் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனா். மேலும், கடை உரிமையாளா் மற்றும் அவரது மகன்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஒரத்தநாடு டிஎஸ்பி ராஜ்குமாரிடம் அறிவுறுத்தினா். இதைத் தொடா்ந்து உணவகம் மற்றும் மளிகைக் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →