முகப்பு
தஞ்சாவூர்

கீழகோயில்பத்து ஊராட்சியில் ஆட்சியா் ஆய்வு

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், கீழ கோவில்பத்து ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், கீழ கோவில்பத்து ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, பண்ணைக் குட்டை வெட்டும் பணி, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி, பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீட்டு கட்டுமானப் பணி உள்ளிட்ட பணிகளை பாா்வையிட்ட ஆட்சியா், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, அம்மாபேட்டை ஒன்றிய ஆணையா் ம. ஆனந்தராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் கிராம ஊராட்சிகள் நாகராஜன், ஒன்றிய பொறியாளா்கள் கதிரேசன், ரமேஷ், ஒன்றிய பணி மேற்பாா்வையாளா் சித்ரா, ஊராட்சித் தலைவா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →