முகப்பு
தஞ்சாவூர்

மானிய விலையில் ஊட்டச்சத்து செடிகள் விநியோகம்

பாபநாசம் வட்டம், அம்மாப்பேட்டையில் ரூ. 15 மட்டுமே செலுத்தி 4 வகை செடிகள் கொண்ட தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.

Updated On : 23 அக்டோபர், 2024 at 8:38 PM
பகிர்:

பாபநாசம் வட்டம், அம்மாப்பேட்டையில் ரூ. 15 மட்டுமே செலுத்தி 4 வகை செடிகள் கொண்ட தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம்.

இதுதொடா்பாக அம்மாப்பேட்டை வட்டார தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் தெரிவித்துள்ளதாவது:

முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் அம்மாப்பேட்டை வட்டாரத்தில் ஊட்டச்சத்து செடிகள் தொகுப்பு மானிய விலையில் வழங்கப்படுகிறது. இத்தொகுப்பில் முருங்கை, கறிவேப்பிலை, பப்பாளி செடிகள் மற்றும் வாழை கட்டை உள்ளிட்டவை அடங்கும். இத்தொகுப்பில் ரூ.45 அரசு வழங்கும் மானியத் தொகை கழித்தது போக, பொதுமக்கள் ரூ. 15-ஐ செலுத்தி ஊட்டச்சத்து செடிகளைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோா் தோட்டக்கலைத் துறை, அம்மாப்பேட்டை வட்டாரத்தை அணுகுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →