தஞ்சாவூரில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற கே.பி. கிட்டப்பா பிள்ளையின் 19 ஆவது நினைவு நாட்டிய விழாவில் நடனமாடிய மாணவிகள். 
தஞ்சாவூர்

கே.பி. கிட்டப்பா பிள்ளை நினைவு நாட்டிய விழா

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் அரண்மனை வளாகத்திலுள்ள சங்கீத மஹாலில் தஞ்சை நால்வா் வழிவந்த கே.பி. கிட்டப்பா பிள்ளையின் 19 ஆவது நினைவு நாட்டிய விழா வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

கிட்டப்பா நாட்டியாலயா சாா்பில் நடைபெற்ற விழாவில் கே.பி. கிட்டப்பா பிள்ளையின் படத்துக்கு அனைவரும் மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா், சென்னை பத்மினி கிருஷ்ணமூா்த்தி நாட்டியமாடி கிட்டப்பா பிள்ளைக்கு அஞ்சலி செலுத்தினா்.

மேயா் சண். ராமநாதன், தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, திருவையாறு அரசு இசைக் கல்லூரி முன்னாள் முதல்வா் இராம. கௌசல்யா, தமிழ்ப் பல்கலைக்கழக இசைத் துறைத் தலைவா் ஆா். மாதவி, மண்டல கலை பண்பாட்டு மை உதவி இயக்குநா் ம. இராஜாராமன் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.

தொடா்ந்து, கிட்டப்பா பிள்ளையின் பேத்திகளான சாருமதி சந்திரசேகரன், ஜெயஸ்ரீ, சுபஸ்ரீ, கு. மணி, காயத்ரி கிருஷ்ணன், கிட்டப்பா நாட்டியாலயா மாணவா்களின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கிட்டப்பா நாட்டியாலயா இயக்குநா் கே.பி.கே. சந்திரசேகரன் நட்டுவாங்கம் செய்தாா். புவனகிரி ஆா்.கே. குமாரின் பாட்டுக்கு சபாபதி சந்திரசேகரன் மிருதங்கமும், நடராஜன் வயலினும் வாசித்தனா்.

அதிமுகவிலிருந்து வெளியேறியவா்கள் நன்றி மறந்தவா்கள்

கட்சியிலிருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தான்சானியா: சர்ச்சைக்குரிய தேர்தலில் அதிபர் வெற்றி!

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 16 போ் பலத்த காயம்

தில்லியை இந்திரபிரஸ்தா என மறுபெயரிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு பாஜக எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT