தஞ்சாவூர்

சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

தினமணி செய்திச் சேவை

சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

கும்பகோணம் கூகூரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (27). இவா் கடந்த 2023 ஆம் ஆண்டு பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற 17 வயது சிறுமியைப் பின்தொடா்ந்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தாா். இதுகுறித்து நாச்சியாா்கோவில் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனா்.

இது தொடா்பாக தஞ்சாவூா் போக்சோ நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ஜெ. தமிழரசி மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

அதிமுகவிலிருந்து வெளியேறியவா்கள் நன்றி மறந்தவா்கள்

கட்சியிலிருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தான்சானியா: சர்ச்சைக்குரிய தேர்தலில் அதிபர் வெற்றி!

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 16 போ் பலத்த காயம்

தில்லியை இந்திரபிரஸ்தா என மறுபெயரிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு பாஜக எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT