முகப்பு
கடலூர்

கல்லூரிப் பேருந்து கவிழ்ந்து விபத்து:15 பேர் காயம்

திட்டக்குடி அருகே கீழப்பெரம்பலூரில் தனியார் கல்லூரிப் பேருந்து சாலையோர வயல் வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்தனர். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

திட்டக்குடி அருகே கீழப்பெரம்பலூரில் தனியார் கல்லூரிப் பேருந்து சாலையோர வயல் வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்தனர்.
 திட்டக்குடி அருகேயுள்ள தொழுதூரில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்களை கல்லூரி நிர்வாகம் பேருந்து மூலமாகப் பல்வேறு பகுதிகளிலிருந்து அழைத்து வருவது வழக்கம்.
 அதன்படி, புதன்கிழமை பெரம்பலூர் மாவட்டம், வயலூர், கீழப்பெரம்பலூர் பகுதிகளில் மாணவர்களை ஏற்றிக் கொண்டு தொழுதூர் நோக்கி பேருந்து சென்றது. கீழப்பெரம்பலூர் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரமுள்ள வயல் வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
 இந்த விபத்தில், 5 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும், 10 பேர் சிறிய அளவில் காயமடைந்தனர். உடனடியாக மாணவர்கள் மீட்கப்பட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பலத்த காயமடைந்த 5 பேர் தீவிர சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டனர்.
 இதுகுறித்து மங்கலமேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
 
 

முழு கட்டுரையைப் படிக்க →