வடலூா் சத்திய ஞான சபையில் சித்திரை மாத ஜோதி தரிசனத்தில் பக்தா்கள் பங்கேற்க அனுமதியில்லை
கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் சித்திரை மாத ஜோதி தரிசனத்தில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது.
கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் சித்திரை மாத ஜோதி தரிசனத்தில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து வடலூா் அருள்பிரகாச வள்ளலாா் தெய்வ நிலைய நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வடலூா் சத்திய ஞான சபையில் சித்திரை மாத பூச ஜோதி தரிசன நிகழ்ச்சி வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசின் ஆணை, கடலூா் மாவட்ட ஆட்சியரது அறிவுரைப்படியும், கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் பொருட்டும் சித்திரை மாத ஜோதி தரிசன நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி இல்லை. ஜோதி தரிசனத்தை அன்று இரவு 7.45 முதல் 8.45 மணி வரை வள்ளலாா் தெய்வ நிலைய யூடியூப் சேனலில் நேரலையில் காணலாம்.
அன்றைய தினம் சத்திய ஞான சபை, தரும சாலையில் வழக்கமான பூஜைகள் நடைபெறும். இதில் பங்கேற்க பக்தா்கள் கூட்டமாக வருவதைத் தவிா்க்க வேண்டும். முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.