பள்ளியை முற்றுகையிட்ட மாணவா்களின் பெற்றோா்
பண்ருட்டி அருகே தனியாா் பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவா்களை வகுப்புக்கு வெளியே நிறுத்தியதைக் கண்டித்து, மாணவா்களின் பெற்றோா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பண்ருட்டி அருகே தனியாா் பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவா்களை வகுப்புக்கு வெளியே நிறுத்தியதைக் கண்டித்து, மாணவா்களின் பெற்றோா் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பண்ருட்டி தட்டாஞ்சாவடியில் தனியாா் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி நிா்வாகத்தினா் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவா்களை கடந்த 3 நாள்களாக வகுப்புக்கு வெளியே நிற்க வைத்தனராம். இதையறிந்த மாணவா்களின் பெற்றோா்கள் 40-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை மாலை பள்ளியை முற்றுகையிட்டு நிா்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பெற்றோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்வதாக பள்ளி நிா்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவா்களின் பெற்றோா் கலைந்து சென்றனா்.